Sithar



கலியுகம் முற்றிடும்  நாட்களில் நமது நாட்டில் அநேக விதமான பஞ்சங்களும் துன்பங்களும் பெருகி நடக்கும் அதற்கான அறிகுறிகளை சொல்கிறேன். ஆகாயத்தில் பற்பல களங்கங்கள் உண்டாவதை காணலாம்மிக அதிசயமான வால் நட்சத்திரம் தோன்றி வெட்ட வெளியில் பிரகாசிக்கும். அதிலிருந்து கிளம்பும் ஒளி வால் போல் நீண்டு சந்திரன் மேல் நிற்கும். சூரியனின் வெப்பம் மிக அதிகமாகி புதுப்புது நோய்கள் உண்டாகி மனிதர்கள் மாள்வர்.


அந்தநாள் அக்காலம் நமது நாட்டில்
அநேகவிதப் பஞ்சங்கள் அவத்தை மெத்த
சந்தேக மில்லாமல் சாட்சி யப்போ
சாற்றிடுவே னாகாயந் தனிற் களாங்கம்
விந்தையுடன் நட்சத்திரம் ஒன்று தோன்றி
வெட்டவெளி பிரகாசம் வெகு வாஞ் சோதி
மந்தமின்றி வால் நீண்டு மதிமேல் நிற்கும்
மானிடர்கள் பிணிபலவால் மாள்வார் கதிரே.
                                                                        கோரக்கர் சித்தர்
saitdgl@gmail.com




Annakatti Hill




     

Comments

Popular posts from this blog